இந்தியா………………
இந்தியாவில் 23 வயது இளைஞர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணித்து வந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். காஷ்மீரின் Budgam மாவட்டத்தில் உள்ள Narbal நகரத்தைச் சேர்ந்த Adil Teli எனும் அந்த இளைஞர் 8 நாட்கள், 1 மணி மற்றும் 37 நிமிடங்களில் காஷ்மீரிலிருந்து கன்னியகுமரிக்கு வந்தடைந்துள்ளார்.
அவர் கடந்த மார்ச் 22-ஆம் திகதி ஸ்ரீநகரில் உள்ள Lal Chowk பகுதியிலிருந்து புறப்பட்டு 3,600 கிலோமீட்டர் கடந்து, மார்ச் 30-ஆம் திகதி காலை 9 மணியளவில் கன்னியாகுமரியை வந்தடைந்துள்ளார்.
பயணத்தின் போது, டெல்லி, ஆக்ரா, குவாலியர், ஹைதராபாத், மதுரை போன்ற முக்கிய நகரங்களை அவர் கடந்துள்ளார். அவருடன் ஒரு பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு மெக்கானிக் மற்றும் ஒரு கேமரா குழுவினர் உட்பட 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு வந்துள்ளது.
இந்நிலையில், Adil தனது சாதனையை அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்திற்காக கின்னஸ் உலக சாதனைக்கு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக, எட்டு நாட்கள், 7 மணி நேரம் 38 நிமிடங்கள் நாசிக் நகரைச் சேர்ந்த 17 வயது Om Mahajan மிக வேகமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் வரை பயணித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இப்போது, Om Mahajan-ன் சாதனையை Adil Teli முறியடித்துள்ளார். Adil Teli, 2019-ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் இருந்து Leh வரை 440 கிலோமீட்டர் உயரமுள்ள பயணத்தை வெறும் 26 மணி 30 நிமிடங்களில் சைக்கிளில் ஏறிச்சென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.