குகைக்குள் தவிக்கும் 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளரும்!

1203

தாய்லாந்தின் சிறுவர்கள் கால்பந்து அணியும் மற்றும் உதவிப் பயிற்சியாளரும் தாய்லாந்தில் உள்ள ஒரு குகையில் மாட்டி கொண்டுள்ளனர்.

தாய்ட்லாந்தின் மா சே நகரில் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவரகள் உட்பட உதவிப் பயிற்சியாளரும் அந்த குகையில் இருப்பார் என தகவல் வந்துள்ளது.

இந்த குகை சுமார் 12 கி.மி நீள்ம் உடையது என தெரிவிக்கின்றனார். இந்த குகைக்கு அந்த கால்பந்து அணியினர் சென்றதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவரமடைந்துள்ளது இதனால் அவர்கள் வெள்ள நீரில் சூழ்ந்தனால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியவில்லை என நினைக்கின்றனார்.

மற்றும் அவர்கள் குகைப் பகுதியில் தான் இருக்கிறார்களால் என்று இன்னும் தகவல் வரவில்லை இருப்பினும் ஒரு சிறுவனின் உடமை காணப்பட்டதால் அவர்கள் சென்றிருக்காலம் என முடிவுக்கு வந்துள்ளனார். இந்நிலையில் அங்கு பருவமழை தீவரமடைந்துள்ளதால் மீட்புப்பணியை மேற்கொள்ள முடியவில்லை.

சிறுவர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர் கடந்த 8 நாட்களாக குகைகுள் இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்கிற விவரம் ஏதும் இதுவரை தெரியவில்லை.

இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கி இருப்பதால் கடற்படை வீரர்கள், மற்றும் பேரிடம் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியை விரைவுப்படுத்தியுள்ளனர்.