குண்டானது பிரச்னையா? நித்யா மேனன் கோபம்!!

1345

தமிழில் கடைசியாக மெர்சல் படத்தில் நடித்தார் நித்யா மேனன். அதில் சற்று உடல் எடை கூடி இருந்தார். ஆனால் இப்போது மேலும் பல கிலோ உடல் எடை கூடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.

சமீபத்தில் அவரது போட்டோக்களை பார்த்தவர்கள் அதிர்ந்தனர். ஓ காதல் கண்மணியில் வந்த நித்யாவா இது என சந்தேகம் எழுப்பினர்.

அவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

இது குறித்து நித்யா மேனன் கூறும்போது, ‘இதை எல்லாம் பெரிய பிரச்னை போல் பலரும் பேசுவதுதான் எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக உள்ளது.

இடையில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். உடற்பயிற்சி பக்கமே போகவில்லை. இதனால் எடை கூடிவிட்டது.

இதை எப்படி குறைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

இதுபோல் பலமுறை எனக்கு ஆகியுள்ளது. அதற்குள் பலவிதமாக புரளி கிளப்புகிறார்கள்’ என்றார்