ராஜேந்திரன்……….
கருங்கல் அருகே கார் கவிழ்ந்து குளத்திற்குள் மூழ்கிய விபத்தில் தந்தை மகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இன்று காலை தனது ஆம்னி காரில் தனது மூத்த மகள் ஷாமிலி மற்றும் இளைய மகள் ஷாலினி உடன் கருங்கல் வழியாக ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்வதற்காக வந்துள்ளார்.
அப்போது கருங்கல் பகுதியில் இருந்து செல்லம் கோணம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள செம்மண் குளத்தில் பாய்ந்து மூழ்கியது.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் குதித்து ராஜேந்திரனின் இளைய மகள் ஷாலினி ஐ உயிருடன் மீட்ட நிலையில் கார் முழுவதுமாக குளத்திற்குள் மூழ்கியதால் மற்ற இருவரையும் மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த காரை கயிற்றால் கட்டி இழுத்து கரை பகுதிக்கு கொண்டு வந்த நிலையில் காருக்குள் ராஜேந்திரன் மற்றும் அவரது மூத்த மகள் ஷாமிலி ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கருங்கல் போலீசார் சடலங்களை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.