குளிக்கும் புகைப்படத்தை தோழிக்கு அனுப்பிய இளப்பனுக்கு நேர்ந்த விபரீதம்!!

242

கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார்.

அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் அந்தப்பெண் தனது தோழியின் எனத் தெரிந்தும் அதனை தனது ஆண் நன்பரான ஜாக்சன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து ஜாக்சன் அந்த புகைப்படத்தை காட்டி அந்தப்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனைக்கேள்விப்பட்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்து ஜாக்சனிடம் கடுமையான நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக அந்தப்படத்தை அவர் வேறு சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. நாளுக்கு நாள் அந்தப்பெண்ணுக்கு தொல்லை அதிகரித்தது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அந்தப்பெண் கருக்கல் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தோழி, அவரது நண்பர் ஜாக்சன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.