குளியலறையில் தனிமைப்படுத்திய சுகாதாரப் பணியாளர் : ஏற்பட்ட பரிதாபம்!!

296

தெலுங்கானா…………………..

கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர் வீட்டின் குளியல் அறையில் தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்.

அதே கிராமத்தில் சுகாதார பணியாளர் ஆக பணியில் இருக்கும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

எனவே சிறிய வீட்டில் வசிக்கும் அவர், தன்னுடைய வீட்டின் குளியல் அறையில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அரசின் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.