குளிர்காலத்தில் தலைமுடிக்கு இதையெல்லாம் செய்யாதீங்க!!

352

தலைமுடி…….

குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் வறண்டு போகும், அதேபோன்று தலைமுடியும் வறண்டு போகும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதே இதற்கு காரணம், எனவே குளிர்காலத்தில் தலைமுடியை நன்கு பராமரிப்பது அவசியம்.

குறிப்பாக குளிர்காலங்களில்,

குளிப்பதற்கு சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரிலே தலைமுடியை அலச வேண்டும்.

தலைமுடி வறண்டு போக விடக்கூடாது. முடிந்தவரை லேசாக எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் சீப்பினை பயன்படுத்தக்கூடாது.

செய்ய வேண்டியவை

 

  • முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கரு திரவத்தை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
  • வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த கலவையுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் மாசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலசி விடவும்.

  • கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
  • முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வாரமாக நல்லெண்ணெய், ஒரு வாரம் பாதாம் எண்ணெய், ஒரு வாரம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம்.