குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ள சென்ற இளம் பெண்ணுக்கு போலி டாக்டரால் நேர்ந்த விபரீதம்!!

296

தருமபுரி….

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30). இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சண்முகத்திடம் நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

அப்போது இலக்கியபாரதிக்கு குளுக்கோஸ் போட வேண்டும் என மெடிக்கல் ஸ்டோருக்குள்ளே அழைத்து சென்று சண்முகம் இலக்கியபாரதியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளதார். அப்போது வெளியே வந்து தனது கணவரிடம் இது குறித்து கூறி உள்ளார்.

இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்ததில்,

அவர் மெடிக்கல் ஸ்டோரில் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் என தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.