குழந்தைகளைக் காப்பதற்காக உயிரை இழந்த தாய்: சோக சம்பவம்!!

919

அமெரிக்காவில் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த இரண்டு குழந்தைகளின் தாய் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

San franciscoவில் வசித்து வரும் ஆர்த்தி செந்தில்வேல் தனது குடும்பத்தினருடன் Cowell Ranch State கடற்கரைக்கு சென்றிருந்தார்.ஆர்த்தி தனது பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த பெரிய அலை ஒன்று பிள்ளைகளை இழுத்துச் சென்றது.

முன்பின் யோசிக்காத ஆர்த்தி தனக்கு பெரிய அளவில் நீச்சல் தெரியாது என்பதையும் எண்ணாமல் கடலுக்குள் பாய்ந்தார்.அதற்குள் அவரது உறவினர்கள் அனைவரும் மனித சங்கிலி போல் வரிசையாக நின்று குழந்தைகளை மீட்டனர்.

ஆனால் அதற்குள் ஆர்த்தி கடலில் மூழ்கினார். அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்குபின் அலை ஒன்று அவரை கரைக்கு கொண்டு வந்தது.அவருக்கு உயிர் மீட்கும் முதலுதவி நடவடிக்கைகள் (CPR)மேற்கொள்ளப்பட்டும் அவரை காப்பாற இயலவில்லை.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கலிபோர்னியா பொலிஸ் அதிகாரிகள் இந்த கடற்கரை பகுதியில் அலைகள் ஆபத்தானவை என்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நினைவூட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.