கேரளாவையே உலுக்கிய 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

275

கேரளா…

கேரளாவை உலுக்கிய 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில், அவரது கணவனுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி மோபியா பர்வீன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது சுஹைல் என்பவர் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதால், கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டர். மோபியாவிடம் கணவன் சுஹைல் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக, அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

இதனை நம்பிய மோபியாவும், தனது கை செலவுக்காக, பிரீலான்ஸ் டிசைனராக பணியாற்றி சம்பாறித்து வந்துள்ளார். இந்த சூழலில், ஒருநாள் தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், இதற்காக, ரூ.40 லட்சத்தை உங்களின் வீட்டாரிடம் இருந்து பெற்றுத் தருமாறு மோபியாவிடம் கணவன் சுஹைல் கேட்டுள்ளார்.

காதலித்து திருமணம் செய்த நிலையில், வரதட்சணையை பெற்றுத் தர விரும்பாத மோபியா, சுஹைலின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதன் பிறகு, அவர்களின் குடும்பத்தில் களேபரம் ஆரம்பமானது. அப்போதுதான், சுஹைல் வேலையில்லாமல் இருந்து வருவதும், தனது சம்பளத்தை மட்டுமே அவர் நம்பி இருப்பதையும் அறிந்து மோபியா அதிர்ந்து போனார்.

இதன் காரணமாகவே, சுஹைலும், அவரது அவரது தந்தை யூசூப், தாய் ருகியா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால், தனது கணவர் குடும்பத்தினர் மீது மோபியா, ஆலுவா போலீஸில் புகார் கொடுத்தார்.

இதனிடையே, தனது மனைவி மோபியா பர்வீனின் குடும்பத்தினரிடம் தலாக் நோட்டீஸை அனுப்புமாறு மசூதியில் பதிவு செய்தார். ஆனால், இது பழங்காலத்து முறை என்றும், விவாகரத்து பெற விரும்பினால், சட்டப்படி செய்யும்படி கூறிவிட்டனர்.

இந்தக் கோபத்தில் இருந்த சுஹைல், காவல்நிலையத்தில் மோபியாவின் குடும்பத்தினரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் சுஹைலை, மோபியா அறைந்துள்ளார்.

இதனைப் பார்த்த போலீசார், மோபியாவிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால், வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், “எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம்.

அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது” என எழுதியிருந்தார். இதையடுத்து, சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சுஹைலும், அவரது பெற்றோர்களும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சுஹைலுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அதேவேளையில், அவரது பெற்றோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.