கையில் சுத்தமாக பணமில்லை…. கடன் வாங்கிய முகேஷ் அம்பானி : நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல்!!

1126

முகேஷ் அம்பானி…..

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையில் ஒருமுறை கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு $81.4 பில்லியன் ஆகும். இந்த நிலையில் விமானத்தில் ஒரு முறை பயணிக்கும் போது முகேஷ் அம்பானி கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை Bloomberg Billionaires Index வெளியிட்டுள்ளது. அதன்படி 1980களில் தனது இளம் வயதின் போது முகேஷ் அம்பானி மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்துள்ளார்.

அப்போது பனிமூட்டமான வானிலை காரணமாக, விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதனால் முகேஷ் அம்பானி சிக்கி தவித்துள்ளார்.

அவரிடம் பணமோ அல்லது கிரெடிட் கார்டோ இல்லாத நிலையில் சிரமத்துக்கு ஆளானார். இதையடுத்து சக பயணியிடம் பணத்தை கடன வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.