கொ ரோ னாவால் விசா கிடைப்பதில் சிக்கல் : மணமகன் இல்லாமலே நடந்து முடிந்த திருமணம்!!

837

திருமணம்..

கொ ரோனா வைரஸ் காரணமாக மணமகன் வர முடியாத நிலையில், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மணமகள் ஒருவருக்கு ஆன்லைனிலே திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முஹம்மது அட்னான் கான் என்பவர், கடந்த 5 வருடங்களாக சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் எம்பிஏ பட்டதாரியான முகம்மது அத்னான் கான் என்பவருக்கும், ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொ ரோனா வைரஸ் காரணமாக, சவூதி கடும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், ஹம்மது அட்னான் கானிற்கு விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருமணத்திற்கு மணமகனின் குடும்பத்தார் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தார் பேசி முடிவெடுத்து, ஆன்லைன் மூலமாக திருமணம் செய்துள்ளனர்.

திருமண விழா மற்றும் கையொப்பம் அனைத்தும் மொபைல் வீடியோ அழைப்பின் மூலமாகவே முடித்து வைக்கப்பட்டன.