கோவாக்சின்………
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிட்சீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
பொதுவாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே இருந்து வரும் நிலையில், கோவிட் -19 தடுப்பூசி செலுத்து கொண்ட பலர் உடலில் ஒரு காந்த சக்தி வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். சமீபத்தில் பனஸ்கந்தாவை சேர்ந்தவர், குஜராத்தின் உப்லெட்டாவைச் சேர்ந்த ஒருவரும், நாணயங்கள், பாத்திரங்களை தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டவாறு ஷேர் செய்த புகைப்படங்கள் இப்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், தற்போது வரை தடுப்பூசி போட்டு கொள்ளாத சூரத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி மற்றும் அவரது பேரன் ஒரு காந்த சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல பனஸ்கந்தாவை தலைமையிடமாகக் கொண்ட பழன்பூரில் உள்ள நவ்ஜிவன் (ஜீவன்ஜியோட்) சொசைட்டியில் வசிக்கும் நவீன்பாய் ராவல், நான்கு நாட்களுக்கு முன்பு தூங்கும்போது, திடீரென நாணயங்கள் அவரது உடலில் ஒட்டியதை உணர்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், நாணயங்களை அகற்றும்போது, அவர் தோலில் ஒரு காந்த சக்தியை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் எடுத்து பார்க்கலாம் என முடிவு செய்த நிலையில், காந்த உணர்வால் ஸ்கேன் செய்ய அனுமதிக்குமா? என்ற கேள்வி அவருக்குள் எழுந்துள்ளது. இதேபோன்ற சம்பவம் சூரத்திலும் நடந்துள்ளது. சூரத்தில் பர்பத் பாட்டியா பகுதியில் உள்ள சுபாஷ்நகர் சொசைட்டியில் வசிக்கும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு காந்த உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆரம்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தாங்கள் நம்பவில்லை, எனினும் சில உலோக பொருட்கள் உடம்பில் ஈர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உண்மை என்னவென்றால், கோவிட் -19 தடுப்பூசி உடலில் அத்தகைய நிலையை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், அதற்கும் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற எதுவும் நடக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.