கொரோனா தா க்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்.! எப்படி சாத்தியம்? அருமையாக விளக்கிய பேராசிரியர்!!

379

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு பொலிசார் பயிற்சி அளித்து வருகின்றனர்.

பொதுவாக போ தைப்பொருட்கள் மற்றும் வெ டிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி பொ லிசார் தெரிவித்துள்ளனர்.

வைரஸுக்கு வாசனை இல்லை என்றாலும், அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்று இத்திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், எனவே ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரோ ந்து செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்..