கொரோனா……
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக ஆந்திராவிலிருந்து தெலங்கானாவிற்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளை போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தெலுங்கானாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையிலான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் புல்லூர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், தெலங்கானாவிற்குள் ஆம்புலன்ஸை அனுமதிக்க மறுக்கின்றனர்.
இதனால் ஆந்திராவிலிருந்து மருத்துவ தேவைக்காக ஹைதரபாத் செல்லவிருக்கும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளிகளில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்றும் கூறப்படுகிறது.
ஹைதரபாத்தில் படுக்கைகள் இல்லாததால், அண்டை மாநிலத்திலிருந்து வரும் ஆம்புலன்ஸ்களை திருப்பி அனுப்புவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.