கொரோனாவினால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு காருக்குள் தங்கியிருந்து பரிதாபமாக இறந்து போன தமிழர்!!

1177

ராஜேஷ் ஜெயசீலன்

இங்கிலாந்தின் வாடகை டக்ஸி செலுத்துனரான தமிழர் ஒருவரின் மரணம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, அவரது வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தா க்கத்துடன் காருக்குள்ளேயே அவர் வாழ்ந்த துயரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ஹாரோவில் வசித்து வந்த ராஜேஷ் ஜெயசீலன், இந்த மாத தொடக்கத்தில் கோவிட் -19 க்கு தொற்றுக்குள்ளானது உறுதியானது. 45 வயதான இவர், இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்தவர். அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் பெங்களூரிலேயே வசித்து வருகிறார்கள்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அவர் இறப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசினார். மார்ச் 25 அன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் அவர் கடைசியாக பயணிகளை அழைத்துச் சென்றார்.

அவரது நண்பரான சுனில் குமார் தெரிவித்தபோது, அந்த பயணத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் கொரோனா அறிகுறிகளை ஜெயசீலன் உணர்ந்தார். ஏப்ரல் 3 ஆம் திகதி அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டக்ஸி சாரதியாகன ஜெயசீலன் பணிபுரிவதால், வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்து, அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இறப்பதற்கு இரண்டு வாரங்களின் முன்னர்தான் அவர் தனது பிளாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். உடனடியாக புதிய வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓரிரு நாட்கள் அவர் தனது காரில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஹாரோவிலும் தங்கியிருந்தார்“ என்றார்.

அவர் வைரஸால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சமயத்தில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து தனது காரில் பயணிகளை அழைத்துச் சென்றிருந்தார். கோவிட் -19 இன் அறிகுறிகளைக் காட்டிய பின்னர், ஜெயசீலன் வேலைக்குத் திரும்பவில்லை. சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார்.

பிரித்தானிய சுகாதார சேவைகள் இந்த நடைமுறையைத்தான் பரிந்துரைக்கிறது.ஜெயசீலனின் நிலை மோசமடைந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி வாரங்களில் நிறைய போ ராடினார். சமைக்கவோ அல்லது வெளியே செல்லவோ அவருக்கு சக்தியிருக்கவில்லை“ என்று குமார் கூறினார்.

அவர் உண்மையில் ஒரு வாரம் பட்டினி கிடந்தார். அவர் கஷ்டப்பட்டார். ஏப்ரல் 3 ஆம் திகதி, அவர் சிரமப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் நோர்த்விக் பார்க் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பினார். ஆனால் ஏப்ரல் 11 அன்று மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாக மருத்துவமனையால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவமனை படுக்கையிலிருந்து தனது மனைவியுடன் பேசினார். நானும் அவருடன் பேசினேன். ஆனால் நான்கு மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிவிக்க மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது என்றார்.

ஜெயசீலன் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை சென்று சந்தித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்திலும் இந்தியா சென்றிருந்தார். ஜனவரி மாதம் மீண்டும் லண்டனுக்கு வந்த அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ அழைப்பு மூலம் தவறாமல் பேசினார்.

தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவது, ஒரு வீடு கட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது இறப்பின் மூலம் அந்த குடும்பத்தின் எதிர்காலம் இருண்டு விட்டது. அவர்களிற்கு உதவுவதற்காக, குமார் ஒரு பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த பக்கத்தின் மூலம் இதுவரை 14,500 பவுண்ட்ஸ் வரையான பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.அவரது குடும்பத்தினருக்கு உதவ விரும்புவர்களை நிதியுதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.