கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!!

580

நிபா வைரஸ்..

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் கோவிட்-19 தொற்றை பரப்பும் கொரோனா வைரஸை விட மிக ஆபத்தான நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மகாராஷ்டிராவில் இரண்டு வகையான வெளவால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் வெளவால்களில் கண்ட நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். பூனேவில் உள்ள என்.ஐ.வி தேசிய வைராலஜி நிறுவனத்தின் வல்லுநர்கள் இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள வௌவ்வால் இனங்கள் எதுவும் முன்னர் நிபா வைரஸ் வெளிப்பாட்டைக் காட்டியது இல்லை என்று என்.ஐ.வி ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரக்யா யாதவ் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா 4 முறை நிபா வெடிப்பை சந்தித்துள்ளது. முதல் முறையாக 2001-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் காணப்பட்டது.

அதன் பிறகு 2007-ஆம் ஆண்டு மீண்டும் மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் காணப்பட்டது. அதன் பிறகு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கேரளாவில் இரண்டு முறை இந்த வைரஸ் பரவியது.

நீபா வைரசுக்கு எந்த சிகிச்சையம் கிடையாது. அதற்கான தடுப்பூசியும் இன்னும் தயாரிக்கப்படவில்லை. இந்த வைரஸால் யாராவது பாதிக்கப்பட்டால், 65 சதவீத பேர் இறந்துவிடுவார்கள். அதனால்தான் இந்த வைரஸ் மிகவும் கொடியதாக கருதப்படுகிறது.