கோடி ரூபாய் கொடுத்தாலும் அது மட்டும் முடியாது, கலக்கப்போவது யாரு நவீன் திருமண விஷயத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி!!

576

நவீன் பலகுரல் மன்னன், இவருடைய திறமைக்கு பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்.

இவர் ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகியதை மறைத்து, தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்கின்றார் என கூறப்படுகின்றது.ஆனால், நவீனோ நான் யாரையுமே திருமணம் செய்யவில்லை, வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துகிறார்கள் என கூறி வருகின்றார்.

இந்நிலையில் திவ்யலட்சுமி என்பவர் ‘எனக்கும் நவீனுக்கு திருமணம் நடந்தது உண்மை தான், தற்போது இரண்டாவது திருமணத்திற்காக என்னிடம் பேரம் பேசுகின்றார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும், என்னால் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது’ என அவர் கூறியுள்ளார். இப்படி நவீன் விஷயம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்துக்கொண்டே இருக்கின்றது, யார் சொல்வது உண்மை என்று தற்போது வரை தெரியவில்லை.

நவீன் இந்த விஷயம் குறித்து பேசுகையில் ‘திவ்யலட்சுமியால் என் குடும்பம் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர், இதை சட்டப்படி நான் சந்திப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.