கௌதம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இடையில் வந்தது யார்?

682

கௌதம் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் கபாலி சமயத்தில் பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டுள்ளார்.

இதில் கௌதம் மேனன் சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போக, இந்த படம் தான் நாம் அடுத்து செய்கின்றோம்.வீட்டில் மட்டும் சொல்லுங்கள் வெளியே யாரிடமும் வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டாராம், காலையில் கதை சொன்ன கௌதமிற்கு மாலையில் இடி போல் ஒரு செய்தி வந்துள்ளது.

ரஜினி ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்துவிட்டார் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது, இடையில் யார் புகுந்து கௌதம் பற்றி அவரிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை.இதுக்குறித்து கௌதமிடம் கேட்கையில் ’நல்லவங்க யாரோ, ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.