சக மாணவியை காதலித்த இன்ஜியரிங் மாணவி : கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகு நேர்ந்த விபரீதம்!!

257

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஏரியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கோவையில் இளம்பெண் ஒருவருடன் அந்த கல்லூரி மாணவி இருப்பது தெரியவந்தது.

பின்பு போலீசார் கோவை விரைந்து சென்றனர். அங்கு இருந்த கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மாணவி 2ம் ஆண்டு படிக்கும்போது, என்ஜினியரிங் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்பு நாங்க இங்கே மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்

எங்களால் பிரிந்து வாழ முடியாது என போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாணவியை அடிக்க முயன்றனர். பின்பு, போலீசார் இரண்டு மாணவிகளுக்கும் கவுன்சிலிங் அளித்தனர். லெஸ்பியன் உறவு இந்த சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்தனர்.

கல்லூரி மாணவியிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனால், மனவேதனையடைந்த இன்ஜினியரிங் மாணவி பிளேடால் கைகளை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.