சந்தோஷம் தாங்காமல் அழகிய மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகர்! புகைப்படம் உள்ளே!!..

998

நடிகர் அரவிந்த்சாமியின் மகனின் புகைப்படத்தை முதன் முறையாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அரவிந்த்சாமியின் மகன் ஐபி டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இதை அரவிந்த்சாமி ட்விட்டரில் பெருமையாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் , மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக இரு. கனவுகள் பெரிதாக இருக்கட்டும் என்று அறிவுரையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை, முன்னதாக மகள் ஆதிரா தனக்காக பாசத்துடன் செய்த கேக்கை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.எப்போதும், மீடியா வெளிச்சத்தில் இருந்து தனது பிள்ளைகளை தள்ளியே வைத்திருக்கும் அரவிந்த் சாமி தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.