குறிப்பிட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். ஒரு ஆர்.ஜே வாக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராக பொறுப்பேற்று மக்களின் பேராதரவை பெற்றவர் மாகாபா ஆனந்த்.
நடுவில் படங்கள் எல்லாம் நடித்தார் ஆனால் அவ்வளவாக அவருக்கு பெயர் கொடுக்கவில்லை. இந்த நேரத்தில் அவர் பணிபுரியும் தொலைக்காட்சியே ஒரு விருது விழா நடத்தியது. அதில் மாகாபா ஆனந்திற்கு சிறந்த தொகுப்பாளர் என்ற விருது கிடைத்துள்ளது.
அப்போது பேசும்போது அவர், சாதாரண மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் குழுவினருக்கு ஆலோசகராக பணியாற்றுகிறேன். நமக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வேலையை தான் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் பேசியுள்ளார்.