பிச்சையெடுத்த பெண்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலித் பிரசாத். பெரும் வியாபாரியான இவர் கொரோனோவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வருமானமில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் மக்களுக்கு உதவும்வகையில் உணவு பொட்டலங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு உதவியாக அவரது டிரைவரான அனிலும் உடன் சென்றுள்ளார். அப்போது ஒரு பகுதியில் தினமும் தொடர்ந்து ஒரு பெண் வந்து உணவு பொட்டலங்கள் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் அனிலுக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அந்த பெண்ணிடம், நீ ஏன் தினமும் பிச்சை எடுக்கிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு அவர் என் பெயர் நீலம், எனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் என் சகோதரர் என்னை தாயுடன் விரட்டிவிட்டார்.
பிழைப்பதற்கு வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சை எடுத்து வருகிறேன் எனக்கூறி க ண்கலங் கியுள்ளார். இதனைக் கேட்டு அவர் மீது இரக்கம் கொண்ட அனில் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து தனது முதலாளியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது முதலாளி இருவருக்கும் நேற்று திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் நீலம் கடவுள் என்னை கைவிடவில்லை என ஆனந்ததுடன் கண்கலங்கியுள்ளார்.