சாலையில் கிடக்கும் அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள் : கண்கலங்க வைக்கும் காணொளி!!

551

கூலித் தொழிலாளர்கள்..

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், டெல்லியில் இருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்கள் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கால் நோய் பரவல் தடுக்கப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மக்கள் இன்று உணவுக்கே வழியில்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு காவல்துறையினரும், தன்னார்வலர்களும் இணைந்து முடிந்தளவிற்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சிலர் உணவின்றி தவிப்பதும், சாலையில் கொட்டிய பாலை ஒருவர் தன்னுடைய கைகளால் சேகரிப்பதும் போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது, டெல்லியில், நிகாம்போத் காட் பகுதியில் ஒரு நீர் நிலையோரம் இடுகாட்டின் அருகே அழுகிய வாழைப்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அந்த அழுகிய பழங்களில் ஓரளவு நன்றாக இருக்கக்கூடியவற்றை சேகரித்து கூலித் தொழிலாளர்கள் சிலர் உட்கொண்டு வருகின்றனர்.

நாள்கூலிக்கு வேலை பார்க்கும் தங்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக எவ்வித வேலையும் கிடைக்கவில்லை, கையில் பணமில்லாததால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு்ள்ளதாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.