சாலையில் கிடந்த வெளிநாட்டு பெண்: நேரில் பார்த்தவர்கள் செ ய்த நெகிழ வைக்கும் உதவி!!

240

மும்பை………

மும்பையில் சாலையோரம் கிடந்த ரஷ்ய பெண்ணை மீட்டு அப்பகுதி மக்கள் தூதரகத்துக்கு கொண்டு சேர்த்த நெகிழ்ச்சியான ச ம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா, கொரோனாவுக்கு முன்பாக இந்தியா வந்தவர் மும்பை சாகிநாகா பகுதியில் இருந்துள்ளார்.

உடலில் சில காயங்களுடன் இருந்த மெரினாவை, கணபதி பந்தலை சேர்ந்தவர்கள் மீட்டு தூதரகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மெரினாவை பற்றி விசாரித்ததில், 35 வயதான அப்பெண் மூளை நரம்பியல் கோளாறால் பா திக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மெரினாவின் புகைப்படத்தை வெளியிட்டு தேடியதில், அவரது குடும்பத்தினர் கிடைத்துள்ளனர்.

பொவாய் பகுதியை சேர்ந்த மெரினாவுக்கு 7 வயதில் மகன் இருப்பதும் தெரியவந்துள்ளது. கோவாவிலிருந்து விமான சேவை தொடங்கும் போது மெரினா பா துகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.