சாலையோரம் மல்லாக்க கவுந்து விழுந்து கிடந்த ஆர்யா : காரணம் என்ன தெரியுமா?

775

ஆர்யா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்தவர்கள் பயந்துவிட்டனர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்து நிம்மதியாக உள்ளார் ஆர்யா. அந்த நிகழ்ச்சி என்னவோ முடிந்துவிட்டது ஆனால் ஆர்யாவையும், அந்த 3 பெண்களையும் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடு இல்லை.

இந்நிலையில் ஆர்யா ட்வீட் ஒன்று போட்டுள்ளார். ஆர்யாவுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சைக்கிளில் எங்காவது கிளம்பிவிடுவார். இந்நிலையில் அவர் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார்.

ஆர்யா 200 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றபோது சாலையோரம் சைக்கிள் ஒரு புறமாகவும் அவர் ஒரு புறமாகவும் கிடந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அதன் பிறகே அவர் சும்மா தான் அப்படி படுத்துக் கிடந்துள்ளார் என்பது தெரிந்தது.

9.38 மணிநேரத்தில் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதை செய்துள்ள ஆர்யாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆர்யா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்ட புகைப்படங்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் தாங்களும் இவ்வாறு செய்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் செயலிலும் இறங்குகிறார்கள்.