சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞன் திடீர் மரணம் : கதறும் பெற்றோர்!!

464

சென்னை…

தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர், பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று மாலை பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்த நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஆன்லைன் மூலம் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அதன் பின் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்ற அவருக்கு, இடது பக்கம் வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உடைந்து போயுள்ளனர். ரஞ்சித்தின் மரணத்திற்கு சிக்கன் தான் காரணம் என்று குறித்த ரெஸ்ட்டாரண்ட் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சாப்பிட்ட மற்ற 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதால், பொலிசார் ரஞ்சித்தின் பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்துள்ளனர். அதன் முடிவு வந்த பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

அங்கு 4 நண்பர்கள் சேர்ந்து பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர் .

இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றது எனக் கூறியுள்ளார்.