சிறு வயதில் தனது குடும்பத்துடன் தளபதி விஜய் : இதுவரை யாரும் பார்த்திராத போட்டோ இதோ.!!

332

நடிகர் விஜய்…

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா தாக்கம் குறைந்ததும் துவங்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது

. இதுவரை பலரும் பார்த்திராத இப்புகைப்படம் டுவிட்டர், இன்ஸ்டாகிராமில், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..