சிறு வயது முதல் 40 ஆண்டுகளாக ஒருநாள் கூட தூங்காத பெண்: மருத்துவர்களையே அதிர வைத்த சம்பவம்!

453

சீனா…

சீனாவில் பெண் ஒருவர் தமது சிறு வயது முதல் ஒருநாள் இரவு கூட தூங்கியதில்லை என வெளிப்படுத்தியது மருத்துவர்களை அதிர வைத்துள்ளது.

சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானைச் சேர்ந்த லி ஜானிங். இவருக்கு தூக்கமில்லாத இந்த விசித்திர வியாதி கண்டு பிடிக்கப்பட்டுளளது.

தனக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் இதுவரை ஒருபோதும் தூங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், இவரின் இந்த கூற்றை சோதிக்க பலர் முயற்சி செய்தனர். அனால், கடைசியில் அவர்களே தூங்கிப்போயுள்ளனர். ஆனால் லி ஜானிங் மட்டும் தூக்கமின்றி, புத்துணர்வுடன் காணப்படுகிறார்.

இது குறித்து லி ஜானிங் கணவர் கூறுகையில், எனது மனைவி தூங்குவதை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஊரே தூக்கத்தில் இருக்கும் போது லி ஜானிங் மட்டும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பார் என்றார்.

மனைவியின் இந்த தூங்காத நிலையால் கவலை கொண்ட கணவர், தூக்க மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பலனேதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் குழு முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், லி ஜானிங் தற்போது தூங்குகிறார், ஆனால் அது விசித்திரமான முறையில் என கண்டறிந்தனர்.

அவரது தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது கண் இமைகள் கவிழ்வதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதுவே அவர் தூக்கத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ஆனால் அப்போதும் அவர் பேசிக்கொள்வதையும் மருத்துவர்கள் கண்டறிந்தார்கள்.

மேலும், ஒரு நாளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பதையும் மருத்துவர்கள் சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.