சிறுமிக்கு 5 ஆண்டுகள் பாலியல் தொல்லை செய்த குடும்பத்தினர் : அதிர்ச்சி தகவல்!!

492

புனே…

புனேவில் வசித்து வரும் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஒரு நாள் பள்ளியில் ஆசிரியர் பெண் பாதுகாப்பு குறித்து பாடம் எடுத்து வந்தார். அதாவது, ‘குட் டச்’, ‘பேட் டச்’.. அப்படி என்றால் என்ன என்பது குறித்து அந்த ஆசிரியர் விளக்கமாக தெரிவித்து வந்தார். அப்போது அந்த சிறுமி சொன்ன விஷியத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், அந்த சிறுமியிடம் நடந்தவற்றை கூறும் படி கேட்டார்.

அந்த சிறுமி சொன்னது…. சிறுமிகளின் தாயைத் தவிர வேறு யாரும் பிறப்புறுப்பு, மார்புப் பகுதியைத் தொடக் கூடாது என்று ஆசிரியர் பாடம் நடத்தி வந்த நிலையில், தந்தை, அண்ணன், தாத்தா மற்றும் தூரத்து உறவினர் (மாமா) தன்னை அந்த இடங்களில் தொட்டதாக அந்த சிறுமி ஆசிரியரிடம் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், புனே போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து, அந்த ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், பெண் போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக இவரகள் அனைவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துது தெரியவந்தது. அதிலும் இவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, 45 வயதான தந்தை, 60 வயதான தாத்தா மற்றும் 25 வயதான மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் சகோதரர் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என்று புனே போலீசார் தெரிவித்தனர்.

4 பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் இவர்கள மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பாக இருக்கவேண்டிய தந்தை, அண்ணன், தாத்தா.. இவர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.