சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்- முன்னணி கலைஞர் அதிரடி பதில்!

577

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது சீமராஜா படத்தில் நடித்து வருகின்றார்.அதே நேரத்தில் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ்-பிக்சன் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களுக்கு வசனம் எழுதிய கிரேஸி மோகன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவலை கூறியுள்ளார்.

இதில் ‘சிவகார்த்திகேயன் காமெடி நன்றாக செய்கின்றார், அதே நேரத்தில் வேலைக்காரன் போக கருத்துள்ள படத்திலும் நடிக்கின்றார்.அவரை பார்க்கும் போது எனக்கு ரஜினியை பார்ப்பது போல் உள்ளது, இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தெரிகின்றது’ என கூறியுள்ளார்.