சுடுகாட்டில் நள்ளிரவில் தியானம் செய்வார்! அகோரிகளுடன் நட்பு… மாந்திரீகம் மீது ஈடுபாடு கொண்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

372

வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி…

இந்தியாவில் மாந்திரீகம், மந்திர தந்திரங்கள் கற்று கொண்டிருந்த அமெரிக்க பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Mitchell. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசிக்கு வந்தார்.

அங்குள்ள மலைப்பகுதியில் தங்கி மாந்தீரீகம், சூனியம் போன்ற விடயங்களை கற்று வந்திருக்கிறார் Cynthia Mitchell. அவருக்கு அதன் மீது அதீத ஆர்வம் இருந்த நிலையிலேயே கற்று வந்தார்.

இந்த நிலையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த Cynthia Mitchell மர்மமான முறையில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துகிடந்தார். அவரின் சடலம் தற்போது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தரப்பட்டது.

அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். Cynthia உடன் தங்கியிருந்த அவர் தோழி கூறுகையில், சில மாதமாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

அதுவும் கடந்த நாட்களாக உடல்நிலை மிக மோசமானது, இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை கூட எடுத்து வந்தார். மாந்திரீகம் மீது அதிகம் ஈடுபாடு கொண்ட Cynthia நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து தியானம் செய்வார்.

வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்த அகோகரிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, அவர்களுடன் தான் Cynthia தங்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து கஞ்சா போன்ற போதை பொருட்களை அதிகம் எடுத்து கொள்வார் என கூறியுள்ளார்.

ஏற்கனவே போதையில் இருந்த போது பொலிசாருடன் Cynthia வாக்குவாதத்தில் ஒருமுறை ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.