நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தனர். பிரகதி அசோக், பிரகதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.
அசோக் செல்வன், பிரகதியின் புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் கடுப்பாகியுள்ளனர். ஜோடி சூப்பர் என்று சிலரும், இந்த ஆளுக்கு எப்படி பிரகதி செட்டாச்சு என்று சிலரும் பேசிக் கொள்கிறார்கள்.
காதல் சமூக வலைதளங்கள் பக்கம் முழுவதும் தன்னுடைய காதல் பேச்சாக இருப்பது அசோக் செல்வனுக்கு தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் இது குறித்து கண்டுகொள்ளவில்லை. திருமணம் நான் தற்போது திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன் என்று பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் பாட்டு பாடுவதிலும், அசோக் படங்களிலும் பிசியாக உள்ளனர்.