சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளிய 12 வயது சிறுமி : பல ஆயிரம் மைல்கள் நடந்தது ஏன்? நெகிழ்ச்சிப் பின்னணி!!

884

12 வயது சிறுமி

இந்தியாவில் குடும்ப வாழ்க்கையை துறந்து 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் மேற்கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் குஷி ஷா (12). வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பிலும் கெட்டிக்காரர் ஆவார்.

ஒன்பதாம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண் எடுத்த குஷி கடந்த நவம்பரில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். இதன் பின்னர் எளிமையான வாழ்க்கையை வாழ தொடங்கிய அவர் இதுவரை பல ஆயிரம் மைல்களை நடந்தே கடந்துள்ளார்.

இந்நிலையில் துறவறம் செல்ல முடிவெடுத்த குஷி அதற்கான தீக்‌ஷையை எடுத்துள்ளார். இது குறித்து குஷியின் பெற்றோர் கூறுகையில், அவள் மருத்துவராக ஆக வேண்டும் என நினைத்தோம்.

ஆனால் துறவறம் செல்லும் முடிவை அவர் எடுத்தார், இதற்கு நாங்கள் முழு மனதோடு சம்மதித்துள்ளோம், அவளை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக உள்ளது என கூறினர். குஷி கூறுகையில், இந்த உலகம் தற்காலிகமானது. நாம் இங்கு அனுபவிக்கும் இன்பம் நிரந்தரமானது அல்ல.

நான் குழந்தையாக இருந்த போதே எங்கள் குடும்பத்தில் இருந்து 4 பேர் துறவறம் சென்றுள்ளனர் என கூறியுள்ளனர். சிறுமி துறவறம் மேற்கொள்வதை விழாவாக எடுத்து கொண்டாடிய அவர் உறவினர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.