சோனாக்ஷி சின்ஹாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள்!

589

சோனாக்ஷி சின்ஹா இந்திய திரைப்பட நடிகையாவார். ஹிந்தி மொழியில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவராக திகழ்ப்பவர்.நடிகை சோனாக்ஷி சின்ஹா திரையுலகில் நுழையும் முன் 90 கிலோ எடையுடன் இருந்தாராம்.தன் குண்டான தோற்றத்தில் இருந்து ஒல்லியாவதற்காக டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாராம்.

பின்பு சோனாக்ஷி கஷ்டப்பட்டு 90 கிலோவில் இருந்து, 30 கிலோவைக் குறைத்து 60 கிலோ உடல் எடையைப் பெறும் படியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டார்.இவரது ஃபிட்னஸ் ரகசியங்களை நாமும் தெரிந்து கொள்வோம்.

சோனாக்ஷி மேற்கொண்ட டயட் திட்டம்!அதிகாலை – 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிப்பாராம்.காலை உணவு – செரில் மற்றும் கொழுப்பு குறைவான பால் = 1 முழு கோதுமை டோஸ்ட் போன்றவற்றை காலை உணவாக உட்கொள்ளுவராம்.மதிய உணவு – 1 கப் மிக்ஸ்டு வெஜிடேபிள் கறி மற்றும் 2 சப்பாத்தி மற்றும் சாலட் போன்றவற்றை சாப்பிடுவராம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் – 1 கப் க்ரீன் டீ அல்லது ஒரு பௌல் பழங்கள் என்பனவாகும்.இரவு உணவு – 1/2 கப் தால், மிக்ஸ்டு வெஜிடேபிள் கறி, 1 துண்டு சிக்கன் நெஞ்சுக்கறி அல்லது க்ரில்டு மீன் போன்றவற்றை சாப்பிடுவராம்.இந்த ஆரோக்கியமான டயட்டுடன், சோனாக்ஷி சரியான உடற்பயிற்சியையும் மேற்கொண்டார்.

சோனாக்ஷியின் டயட் விதிமுறைகள்:தினமும் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை உட்கொள்வாராம்.தண்ணீர் அதிகம் குடிப்பாராம்.மாலை 6 மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை மிதமான அளவில் தான் சாப்பிடுவாராம்.உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான உடல் கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம்.உடற்பயிற்சிகள், இவரது உடல் எடையில் மாற்றத்தை நன்கு வெளிக்காட்டுவதால், ஜிம்மில் உடற்பயிற்சியை விரும்பி செய்கிறாராம்.