ஜாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை: அதிர்ச்சி வீடியோ!!

398

கோர்ட் நீதிபதி….

ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட, கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி, உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டின் அருகே ஜாக்கிங் சென்றுகொண்டிருந் தார். சாலையின் ஓரமாக அவர் சென்றுகொண்டிருந்த போதும் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது.

கீழே விழுந்து படுகாயமடைந்த நீதிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், விபத்து காரணமாக மரண டைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லப்பட்ட நீதிபதி, அரசியல் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அதில் தொடர்புடையவர்கள் இதில் சம்பந்தப்பட்டி ருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

’இது இந்திய நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள பெரிய அச்சுறுத்தல். இதுபற்றி ஓய்வு பெற்ற நீதி பதி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீசார், அதிகாலை 2 மணிக்கு ஆட்டோ ஒன்றை திருடி இந்த செயலை செய்துள்ளனர். ஆட்டோ யாருக்கானது என்பதை கண்டுபிடித்துவிட்டோம்.

குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது,