ஜிகு ஜிகு உடையில் சிலிர்க்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்!!

741

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அதற்கடுத்தாக வெளிவந்த ‘ரெமோ’ படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.

இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். மகாநதி படத்தில் சாவித்திரி அம்மா வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கி ஒரு முழு நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இவர் சமீபத்தில் காந்தாரி காந்தாரி என்ற ஆல்பம் பாடலுக்கு இறங்கி வந்து ஆடிருப்பார். அந்த பாடல் அவ்ளோ ஹிட் ஆனது. அவ்வப்போது சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி அப்படத்தில்” காலாவதி” என்ற பாடல் ஹிட் ஆகியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி தனது புகைப்படங்களை ஸேர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிகு ஜிகுவென்று இருக்கும் உடையில் காலை மடக்கி உட்காந்து இருக்குற மாதிரியான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.