ஜீப் மீது ஏறிய லாரி : கோவிலுக்கு சென்ற புதுமணத் தம்பதி உள்ளிட்ட 11 பேர் பலி!!

790

ஜீப் மீது ஏறிய லாரி

ஜீப் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உள்பட 11 பேர் ப லியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள ஜோத்பூர் மாவட்டம், ஷேர்கார் அருகே உள்ள பாலோத்ரா நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த லாரியும், ஒரு ஜீப்பும் நேருக்கு நேர் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன.

இதில், லாரிக்கு அடியில் சிக்கி ஜீப் நசுங்கியது. அதில் பயணித்த 6 பெண்கள் உள்பட 11 பேர் உ யரிழந்தனர். இவர்களில், புதுமண தம்பதியும் அடக்கம்.

அவர்களுக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதிதான் திருமணம் நிகழ்ந்தது. தம்பதி சகிதமாக உறவினர்கள் அனைவரும் ராம்தியோரா கோவிலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போதுதான் இந்த பரிதாப விபத்து நிகழ்ந்து, அனைவரின் உயிரையும் ப றித்துள்ளது. விபத்து பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்