டீ கடையில் வேலை பார்க்கும் தங்க மங்கை

624

மரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோயம்புத்தூரை சேர்ந்த கலியமணி இப்போது குடும்பத்தைக் காப்பாற்ற டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

41 கிமீ மராத்தன்களில் பங்குபெற்ற தமிழ்நாட்டின் மாநில அளவிலான ஓட்டப்பந்தய வீரர், நான்கு தங்க பதக்கங்களுக்குசொந்தக்காரர், 45 வயது மிக்க கலியமணி இப்போது கோயம்புத்தூரில் உள்ள தனது டீக்கடையில் மிக அதிக நேரம் செலவழிக்கிறார்.

10வது வரை படித்த கலியமணி , கபடி மற்றும் தடகள நிகழ்ச்சிகளில் தனது பள்ளி நாட்களில் பங்கேற்றவர். அவரின் கடமைகள் அவரது பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் 21கிமீ தூரம் ஓடுவதை தனது நடைமுறையாக வைத்திருக்கிறார் இந்த சாதனைப் பெண்.

விளையாட்டு வீரர்களுக்காக அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை எனும் இவர் தனது மூன்று குழந்தைகளைக் காப்பற்றுவதற்காக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

வங்கிக் கடன்கள் மறுக்கப்பட்ட நிலையில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி இந்த விளையாட்டுகளில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் வங்கிக் கொள்ளை புரிந்தவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த வங்கிகள் இவர் போன்ற தங்க மங்கைகளை மதிப்பதே இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் விதியா