டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடி : விசாரணை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

455

சேலம்…

சேலத்தில் இரு சக்கர வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை கோலாரில் மற்றொரு இடத்தில் திருடும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது.

இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர்.

ஒரு புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டுவீலரை தேர்வு செய்துள்ளனர் . பின்னர் வண்டியை, ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர்.