தங்கையையும், 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா : நடந்த விபரீதம்!!

471

கர்நாடக….

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ் பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(4) என மூன்று குழந்தைகள் இருந்தனர்.

கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். அதனால், வெளிமாநிலங்களுக்கு சென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார். சில நாட்களுக்கு முன்பு வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், பிப்.6ல் லட்சுமி, மகன்களான ராஜ், கோமல், குணால், கங்காராமின் சகோதரர் மகன் கோவிந்தா(8) ஆகியோர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அப்படுத்தி பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதவி கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், 5 பேரையும் கொலை செய்ததாக லட்சுமியின் பெரியப்பா மகள் (அக்காள்) லட்சுமி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சுமி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில், எனது சித்தப்பா மக்களை திருமணம் செய்தததால் கங்காராமுடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ளக்காதலாக மாறியது. 6 மாதங்களாக கள்ளத்தொடர்பில் இருந்தோம். இது கங்காராம் மனைவியான தங்கை லட்சுமிக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் கண்டித்தார்.

இதனால் தங்கையை கைவிட்டு என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினேன். ஆனால் இதற்கு அவர் மறுத்துவிட்டார். என்னை விட்டு விலக முயன்றதால் கோபம் அடைந்தேன்..

எங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் தங்கையை கொலை செய்தால் கங்காராமுடன் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். பிறகு பிப்.,5 இரவு 9 மணி அளவில் தங்கை வீட்டுக்கு சென்றேன்.. இருவரும் ஒன்றாக சாப்பிட்டோம்..

நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த தங்கை லட்சுமியை சுத்தியால் அடித்து கொலை செய்தேன். இதை பார்த்த லட்சுமியின் மகள்கள் 3 பேரையும் சுத்தியால் அடித்து கொலை செய்தேன்.

அதன் பின்பு, மைசூரில் உள்ள வீட்டுக்கு பஸ்சில் சென்று ஒன்றும் நடக்காது போல் இருந்தேன். பின்னர் என்மீது சந்தேகம் வரமால் இருக்க கொலை நடந்த வீட்டுக்கு சென்று, லட்சுமி, குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதேன்” என்றார்.