தண்ணீரை தங்கமாக கருதும் தீவு!!

590

“சாண்டா குரூஸ் டெல் ஐசோலேட்” என்று அழைக்கப்படும் இந்த தீவுதான் உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தீவாகும்.

கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையோரத்தில் இருக்கும், ஒரு கால்பந்து மைதான அளவிளான இந்த தீவில் 115 வீடுகள் இருப்பதுடன், 500 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

சான் பெர்ணார்டோ தீவுக் கூட்டத்தில் இதுவும் ஒன்று. மனிதர்களினால் உருவாக்கப்பட்ட இந்த தீவில் தண்ணீர் ஓடுவதில்லை. மின் தொகுப்பும் இல்லை.

இந்த தீவு முன்னோடி குடும்பங்களினால் ஒரு பவள மேடையின் மீது கட்டப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு ஹெக்டேர் அளவுள்ள நிலமாக இது உருவெடுத்துள்ளது.

இங்கு மொத்தம் நான்கு வீதிகள் மற்றும் 10 அருகாமைப்பகுதிகள் இருந்தாலும், காரோ, மோட்டார் சைக்கிளோ இங்கில்லை.

இந்த தீவு தொடர்பில் “தீவு கூட்டங்கள் பற்றிய வரலாற்று ஆசிரியர்” ஜூவைனஸ் ஜூலியோ கருத்து தெரிவிக்கையில், “ஒரு சதுர அடிக்கு உலகிலேயே மிக அடர்தியான மக்கள் தொகை கொண்ட தீவு இதுதான்” என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் குழந்தைகள். இங்கு 2017ம் ஆண்டு ஏழு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒருவர் கூட இறக்கவில்லை. இந்த தீவில் இருக்கும் ஒரேயொரு பாடசாலையில் 170 மாணவர்கள் படிக்கின்றனர்.

12 ஆசிரியர்கள் படம் கற்பிக்கின்றனர். கிட்டத்தட்ட இந்த தீவில் உள்ள அனைத்து குடும்பங்களும் படகொன்றை வைத்துள்ளார்கள். ஒரு மின்சார ஜெனரேட்டரும், இரண்டு சூரிய ஒளி மின்நிலையங்களும் மின்சார தேவையை நிறைவேற்றுகின்றன.

அதிக விலை மிக்கதாக இருக்கும் மின்சாரம் குறித்து மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறைவான மழைவீழ்ச்சி மற்றும் நன்னீருக்கு ஆதரம் இல்லாத காரணத்தினால் கோடைக்காலத்தில் மிகவும் கடுமையாக இருக்கும்.

எனவே, தீவிலுள்ள கிணற்றை நிறப்புவதற்கு கடற்படையின் கப்பலை இந்த பகுதி மக்கள் சார்ந்திருக்கின்றனர். இங்கு தண்ணீர் என்பது தங்க துகள்களுக்கு சமனானது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த தீவுக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.