தன் உயிரை கொடுத்து பேத்தியை காப்பாற்றிய பாட்டி : நெகிழ்ச்சி சம்பவம்!!

706

சென்னையில் தனது பேத்தியின் உயிரை காப்பற்றுவதற்காக பாட்டி தனது உயிரை விட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரை சேர்ந்த நடராஜன் – லட்சுமி தம்பதியினர் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். 2 மாடிகள் கொண்ட வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

வழக்கம்போல் லட்சுமியும் நடராஜனும் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து வியாபாரத்துக்காக பூ கட்டிக்கொண்டு இருந்தனர். லட்சுமியின் மடியில் அவரது பேத்தி லக்ஷனா அமர்ந்திருந்தார்.

அப்போது இரண்டாவது தளத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. விபத்தில் இருந்து தனது பேத்தி லக்ஷனாவை காக்க அவரை இறுக்கி அணைத்துக்கொண்டதால், கட்டிடம் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது.

பேத்தி லக்ஷனா சிறிய காயங்களுடன் தப்பினார். லட்சுமி மற்றும் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.