நயன்தாரா….
சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை படத்தின் மூலம் 2003 இல் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. டயானா மரியம் குரியன் என்ற அவரது பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினர்.
மலையாளத்தில் மோகனலாலுடன் விஸ்மயதம்பத்து, நாட்டு ராஜாவு படங்களிலும், மம்முட்டியுடன் தஸ்கர வீரன், ராப்பகல் படங்களிலும் நடித்தார். 2005 இல் ஐயா படத்தின் மூலம் ஹரியால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதே வருடம் ரஜினி ஜோடியாக சந்திரமுகியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நடிக்கும்வரை நயன்தாரா மற்றுமொரு நடிகையாகவே இருந்தார்.
ஐயா, சந்திரமுகிக்குப் பிறகு அவரது ஸ்டார் வேல்யூ ஏறியது. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு போரடித்து திரையுலகினரும் அவரை தவிர்க்க தொடங்கிய போது, பில்லா படத்தில் உடல் இளைத்து புது லுக்குடன் திரும்பி வந்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை நயன்தாராவே தமிழின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அவரது படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா 2வது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஆச்சர்யப்டுத்தினார்.
அதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரசிகர்கள் அன்போடு இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தன்னை விட 7 வயசு குறைவான நடிகர் பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு “லிஃப்ட்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் கவின்.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, அதே தயாரிப்பு நிறுவனம் கவினை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.