தமிழகத்தை உலுக்கிய மாணவி லாவண்யா தற்கொலை : போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

1622

அரியலூா்…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் அரியலூா் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தாா். பள்ளியில் மதமாற்றத்திற்கு மாணவியை கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த தற்கொலை குறித்து விசாரித்த தேசிய குழந்தைகள் நல ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை.

மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.

உரிய பதிவின்றி செயல்பட்ட பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.