தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் படத்தில் கமிட்டானாரா பிரியா வாரியர்?

952

கண் அழகி பிரியா வாரியர் இப்போதும் சமூக வலைதளவாசிகளால் பிரபலமாகி வருகிறார். அவரை பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

தற்போது என்னவென்றால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகும் புதிய படத்திற்கு பிரியா நாயகி என்று கூறுகின்றனர்.

பிரியா வாரியர் நடித்த முதல் படமான ஒரு ஆடார் லவ் படமே இன்னும் வெளியாகவில்லை அதற்குள் அவருடைய அடுத்த படங்கள் இவைதான் என நிறைய தகவல் வருகிறது.

உண்மையில் அவர் பட வாய்ப்பு வந்தாலும் இன்னும் ஒரு படத்தை கூட ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.