தவறான வாட்ஸ் அப் மெசேஜால் உருவான காதல்: லண்டன் தம்பதியின் அழகான கதை!!

828

லண்டனை சேர்ந்த ஒரு தம்பதியின் காதல் தவறான வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் தொடங்கிய நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தெற்கு லண்டனை சேர்ந்தவர் மைக்கேல் இவாங்கிலு, இவர் டிசம்பரில் Girls Trip என்ற சினிமா பெயரை தனது வாட்ஸ் அப் எண்ணுக்கே அனுப்பியுள்ளார்.

அந்த படத்துக்கு தான், செல்ல வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதமாகவே இதை மைக்கேல் செய்துள்ளார்.

ஆனால் நம்பரை அவர் தவறுதலாக பதிவு செய்ய குறித்த மெசேஜ் லினா டால்பெக் என்ற பெண்ணின் செல்போனுக்கு சென்றுள்ளது.


இதையடுத்து, ஹாய், யார் இது என லினா, மைக்கேலிடம் கேட்டு திரும்ப மெசேஜ் செய்துள்ளார்.
இது அப்படியே இருவருக்குளும் நட்பை ஏற்படுத்த நாள் முழுவதும் மெசேஜ் மூலம் பேசியுள்ளனர்.

பின்னர் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவு செய்து இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் பிடித்து போக மைக்கேலும், லினாவும் டேட்டிங் சென்றுள்ளனர்.

பின்னர் தங்கள் காதலை தனித்தனியே இருவரும் வெளிப்படுத்திய நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 7-ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

லினாவுக்கு துபாயில் அழகு கலை பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக உள்ள நிலையில் தம்பதிகள் அதற்காக துபாயில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

காதல் தம்பதி கூறுகையில், காதலில் ஒரு போதும் முயற்சியை கைவிடக்கூடாது என்பதற்கு எங்கள் காதல் மற்றவர்களுக்கு ஒரு பாடம் என கூறியுள்ளனர்.