சுடுகாட்டில்..
தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாத மகன் உடலை தோண்டி எடுத்தது அதனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர் பாலமுருகன். சிறுவயதிலே தந்தையை இழந்த இவரை, தாய் மூக்காயி வளர்த்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இவரது தாயும் கொரோனாவால் உயிரிழக்கவே, பெரும் துயருக்கு ஆளான பாலமுருகன், மனநிலை பாதிக்கப்பட்டார். தாய் மூக்காயி புதைக்கப்பட்ட சுடுகாட்டிலே தங்கிய அவர் அங்கேயே சுற்றி வந்தார்.
சமீபத்தில் அவரது சடலத்தை தோண்டி எடுத்து வீட்டிற்கே கொண்டுவந்துவிட்டார். துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், எலும்புக்கூடாக மூக்காயி சடலம் வீட்டுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.