ஐதராபாத்..
ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது.
இதனால் நீலம்மா தினமும் நாள் கணக்கில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த நீலம்மாவின் 19வயது மகன் ஸ்ரீராம் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால், தனது அனில்குமாருடனான பழக்கத்தை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அனில்குமாருடன் பேசியும், பழகியும் வந்துள்ளார்.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த ஸ்ரீராம் அனில்குமாரின் செல்போன் எண்ணை கைப்பற்றி அவரிடம் தொடர்பு கொண்டுள்ளார்.
அவரிடம் நேரில் பேச வேண்டும் என்று கூறி எம்.கே.ஆர். நிகழ்ச்சி அரங்கிற்கு வருமாறு அழைத்துள்ளார். அனில்குமாரும் அங்கு சென்றுள்ளார்.
அங்கு அனில்குமாரிடம் தனது தாயுடனான உறவை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும், அனில்குமார் ஸ்ரீராமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் அனில்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது, ஸ்ரீராம் தான் வைத்திருந்த கத்தியால் அனில்குமாரை குத்தினார்.
அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பிய அனில்குமார், அங்கிருந்து தப்பித்து பிரதான சாலைக்கு ஓடிவந்துள்ளார். சட்டையில் ரத்தக்கறையுடன் ஓடி வந்த அனில்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனில்குமாரை கொல்ல முயற்சி செய்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.