தாயும், மகளும் விஷம் அருந்தி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

357

கோவை….

கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் திருமூர்த்தி. இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.

சசிக்குமார் திருமணம் செய்துகொண்டு சரவணம்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். மாற்று திறனாளியான சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டு தாயுடனே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனலட்சுமி தனது மகனுக்கு போன் செய்து தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை சசிக்குமார் தனது அம்மாவிற்கு போன் செய்த போது, அவர் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

உடனடியாக பக்கத்து வீட்டுகாரருக்கு போன் செய்து அம்மாவை பேச சொல்லியுள்ளார். பக்கத்து வீட்டுகாரர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கேட் மற்றும் முன்கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்ற பார்த்தபோது, வீட்டினுள் தனலட்சுமி தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக வர்கள் சசிக்குமார் மற்றும் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தபோது,

மாற்றுதிறநாளி சுகன்யா விஷம் குடித்தும், தாய் தனலட்சுமி தூக்குபோட்டும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இரு உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா?

அல்லது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தாயும், மகளும் இறந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.